முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தமிழ் சினிமாவை ஆட்சி செய்த நகைச்சுவை அரசி ’மனோரமா’ பிறந்த நாள்!

தமிழ் சினிமாவை ஆட்சி செய்த நகைச்சுவை அரசி ’மனோரமா’ பிறந்த நாள்!

ஆச்சி மனோரமா

ஆச்சி மனோரமா

அரை நூற்றாண்டு கோலோச்சிய மனோரமா தமிழ் சினிமா உலகின் நகைச்சுவை பேரரசிதான்.

  • 1-MIN READ
  • Last Updated :

 நகைச்சுவை அரசி மனோரமாவின் பிறந்த நாளான இன்று கலைத்துறையில் அவரின் பயணம் குறித்து சிறப்பு பதிவு. 

தன் யதார்த்த நடிப்பால் நகைச்சுவை அரசியாக 55 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்தவர் ‘ஆச்சி’ என சினிமா உலகால் அழைக்கப்படும் மனோரமா. 1958 ஆம் ஆண்டு ’'மாலையிட்ட மங்கை' திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக சினிமா உலகத்துக்குள் பிரவேசித்தார் மனோரமா. 'களத்தூர் கண்ணம்மா', 'கொஞ்சும் குமரி', 'தில்லானா மோகனாம்பாள்', 'எதிர் நீச்சல்', 'பட்டிக்காடா பட்டணமா', 'காசேதான் கடவுளடா' எனத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துத் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தார் இந்த ‘ஜில் ஜில் ரமாமணி’ மனோரமா.

இதுக்கு பேரு கல்யாணமா? உச்சக்கட்ட கோபத்தில் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சரண்யா!

நடிகர் நாகேஷ் - மனோரமா இருவரும் இணைந்து சந்திரோதயம், அன்னமிட்ட கை, சரஸ்வதி சபதம், தேர் திருவிழா, பூஜைக்கு வந்த மலர், கலாட்டா கல்யாணம் உள்ளிட்ட 19 திரைப்படங்களில் ஜோடியாக இணைந்து ரசிகர்கள் விரும்பும் காமெடி Couple ஆகினர். இவர்கள் இருவரும் திரையில் தோன்றினாலே திரையரங்களில் சிரிப்பு மழை பொழிய ஆரம்பித்துவிடும். அந்தஅளவுக்கு இருவரும் காமெடியில் கலக்கினார்கள்.

'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படத்தில் கண்ணம்மா பாத்திரம். "நடிகன்' திரைப்படத்தில் சத்யராஜை விரும்பும் பாத்திரம், 'சின்ன கவுண்டர்' திரைப்படத்தில் சுகன்யாவை வம்பிழுக்கும் பாத்திரம் உட்பட மனோரமா முத்திரை பதித்த பாத்திரங்கள் பல.

இதையும் படிங்க.. செம்பருத்தி சீரியலுக்கு இப்படியொரு நிலைமையா? புலம்பி தள்ளும் ரசிகர்கள்!

1960 மற்றும் 1970-களில் நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து பின். அடுத்த தலைமுறையான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடனும் இணைந்து குணச்சித்திர பாத்திரத்தில் ரசிக்க வைத்தார் மனோரமா. அதன் அடுத்த தலைமுறையான அஜித், விஜய்,, சூர்யா ஆகியோருடனும் இணைந்து சாதனை படைத்தார் மனோரமா.

“ஆண்களின் அதிகார உலகம்” என்று சொல்லப்படும் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக, அதுவும் நகைச்சுவை நடிகையாக அரை நூற்றாண்டு கோலோச்சிய மனோரமா தமிழ் சினிமா உலகின் நகைச்சுவை பேரரசிதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kollywood, Manorama, Tamil Cinema