முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எல்லாத்துக்கும் இவரு தான் பெரியப்பா... லியோ போர்க்களத்துல தயாரா இருக்காரு .... ஒளிப்பதிவாளர் பகிர்ந்த சர்ப்ரைஸ் வீடியோ

எல்லாத்துக்கும் இவரு தான் பெரியப்பா... லியோ போர்க்களத்துல தயாரா இருக்காரு .... ஒளிப்பதிவாளர் பகிர்ந்த சர்ப்ரைஸ் வீடியோ

விஜய்

விஜய்

நண்பன், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து லியோ படத்துக்காக 3வது முறையாக விஜய்யுடன் இணைந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், அர்ஜுன், திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றுவருகிறது. அடுத்த 3 மாதங்களுக்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு பணிகளை அனைத்தையும் முடிக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறைவான காலமே இருப்பதால் படப்பிடிப்பை விரைவாக முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷனில் கவனம் செலுத்தவதற்காகவே இத்தகைய முடிவை படக்குழுவினர் எடுத்திருக்கின்றனர்.

சமீபத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்தார் இயக்குநர் மிஷ்கின். லியோ படத்தில் நடித்தது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மிஷ்கின், எனக்கும் விஜய்க்கும் படத்தில் சண்டைக்காட்சி உள்ளது. இதற்கான ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக விஜய் என்னிடம், எனக்கு காயம் ஏதும் ஏற்பட்டு விடாமல் கவனமாக இருங்கள் என்றார். ஷாட்டில் அவர் என்னை அடிப்பது போல் காட்சி இருக்கும். நான் ஓகே, ஆல் ரைட் என்றேன்.

அவர் என்னை தாக்குவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. அவை முடிந்ததும் ஓடோடி வந்து என்னை கட்டியணைத்தார். எனக்கு காயம் ஏதும் ஏற்பட்டு விட்டதா என அக்கறையோடு விசாரித்து, என்னை தாக்கியதற்காக வருத்தப்பட்டார்'' என்று கூறினார்.




 




View this post on Instagram





 

A post shared by Manoj Paramahamsa (@manojinfilm)



இந்த நிலையில் நண்பன், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து லியோ படத்துக்காக 3வது முறையாக விஜய்யுடன் இணைந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. மனோஜ் பரமஹம்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அவரது பதிவில், ரெட் கேமராக்களின் பெரியப்பா வந்துவிட்டார். ரெட் வி ரேப்டர் எக்ஸ்எல் (Red V Raptor XL) லியோ போரில் களமிறங்க தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து லியோவில் விஷுவல் டிரீட் காத்திருக்கிறது என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

First published:

Tags: Actor Thalapathy Vijay