The Family Man: ஃபேமிலி மேன் அடுத்த சீசனில் நடிக்க 2 மடங்கு சம்பளம் கேட்கும் மனோஜ் பாஜ்பாய்!

மனோஜ் பாஜ்பாய்

இரண்டாவதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இலங்கைத் தமிழ்ப் போராளிகள் இணைந்து இந்திய பிரதமரை கொலை செய்ய திட்டமிடுவதாக காட்டினர்.

  • Share this:
    தி பேமிலி மேன் தொடரில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துவரும் மனோஜ் பாஜ்பாய், அடுத்த சீஸனுக்கு தற்போது வாங்குவதைவிட ஒரு மடங்கு அதிக சம்பளம் கேட்டுள்ளார்.

    இந்தியாவில் தயாரான வெப் சீரிஸ்களில் சமீபத்தில் அதிகம் கவனம் பெற்றது, அமேசானில் வெளியான தி பேமிலி மேன். இந்திய உளவு அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் திவாரி எப்படி பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதியை முறியடிக்கிறார் என்பதை இதன் முதல் சீஸனில் காட்டினார்கள். இரண்டாவதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இலங்கைத் தமிழ்ப் போராளிகள் இணைந்து இந்திய பிரதமரை கொலை செய்ய திட்டமிடுவதாக காட்டினர். இது தமிழகத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    இந்த இரண்டாவது சீஸனுக்கு ஸ்ரீகாந்த் திவாரி கதாபாத்திரத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய் பத்து கோடிகள் சம்பளமாகப் பெற்றதாக கூறப்பட்டது. விரைவில் மூன்றாவது சீஸனுக்கான வேலைகள் தொடங்க உள்ளன. இதில் கொரோனா, சீனாவின் சதி என இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கதை நடப்பது போல் லீட் அளித்திருக்கிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த மூன்றாவது சீஸனில் நடிக்க, ஒரு எபிசோடுக்கு 2.25 - 2.5 கோடிகள் சம்பளமாக மனோஜ் பாஜ்பாய் கேட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. எப்படியும் 20 கோடிக்கு குறையாமல் அவருக்கு கிடைக்கும். அதாவது இரண்டாவது சீஸனைவிட ஒரு மடங்கு அதிகம்.

    இந்தி ஹீரோயிச படங்களில் நடிக்கும் அக்ஷய் குமார் போன்றவர்கள் ஒரு படத்துக்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகையில் மனோஜ் பாஜ்பாய் போன்ற திறமையான நடிகர்களுக்கு 20 கோடிகளே குறைவுதான்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: