ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எனெர்ஜியையும் புத்துணர்ச்சியையும் தந்தார்... விஜய்யுடனான சந்திப்பு குறித்து மனோபாலா பெருமிதம்!

எனெர்ஜியையும் புத்துணர்ச்சியையும் தந்தார்... விஜய்யுடனான சந்திப்பு குறித்து மனோபாலா பெருமிதம்!

விஜய் - மனோபாலா

விஜய் - மனோபாலா

நடிகர் மனோபாலா வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை சந்தித்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை சந்தித்து புத்துணர்வு அடைந்ததாக நடிகர் மனோபாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷாம் மற்றும் சம்யுக்தா உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இசை எஸ்.எஸ்.தமன்.

முழுக்க முழுக்க குடும்ப உறவுகளின் உணர்வுகளை மையப்படுத்திய ஃபீல் குட் படமாக வாரிசு இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். தீபாவளி கொண்டாத்தை அதிகப்படுத்தும் விதமாக வாரிசு முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை இசையமைப்பாளர் தமனும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

27 வயதில் மகன்... 23 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த பப்லு பிரித்விராஜ்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் நடிகர் மனோபாலா வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை சந்தித்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவில், “தளபதி விஜய்யை வாரிசு செட்டில் சந்தித்தது அற்புதமாக இருந்தது. அவர் இன்னும் அப்படியே இருக்கிறார். நடனமாடும் போது நிறைய எனர்ஜி. 15 நிமிட பேச்சு. எனக்கும் புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் தந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay