முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனோபாலா - வெளியான லேட்டஸ்ட் தகவல்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனோபாலா - வெளியான லேட்டஸ்ட் தகவல்

மனோபாலா

மனோபாலா

Actor Manobala : மாரடைப்பால் மருத்துவமனைமையில் அனுமதிக்கப்பட்ட மனோபாலா இன்று இல்லம் திரும்புகிறார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் மனோபலா. தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்து வரும் இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பின் தற்போது நலமுடன் இருப்பதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியிடம் மனோபாலா தெரிவித்துள்ளார். ஆஞ்சியோ சிகிச்சை பெற்று குணமாகி வரும் அவர், இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளார். இதனையடுத்து அவரை தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் நலம் விசாரித்தார்.

மனோபாலா நலம் பெற பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தனது ட்விட்டர் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். மனோபாலா நடிப்பில் சமீபத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வால்டர் வீரய்யா போன்ற படங்கள் வெளியாகயிருந்தன.

First published:

Tags: Heart attack