படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய பிரபல நடிகை

பிரபல மலையாள நடிகையும் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியுமான மஞ்சு வாரியர் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

news18
Updated: December 5, 2018, 10:52 PM IST
படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய பிரபல நடிகை
நடிகை மஞ்சு வாரியர்
news18
Updated: December 5, 2018, 10:52 PM IST
பிரபல மலையாள நடிகையும் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியுமான மஞ்சு வாரியர் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாள பட உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் தற்போது ஜாக் அண்ட் ஜில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹரிபேடு என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. நடிகை மஞ்சு வாரியர் இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு காயமடைந்துள்ளார்.

இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் படக்குழுவினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் வருகை குறித்து நடிகர் விஷால் பேட்டி!

First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்