கடந்த வாரம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் விஜய்யின் பேச்சு, அந்தப் படத்தின் பாடல்கள் என தொடர்ச்சியாக 2 நாட்களுக்கு வாரிசு படமே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தது. அந்த வகையில் இந்த வாரம் துணிவு அந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. வானத்தில் துணிவு பட போஸ்டரை பறக்கவிட்டு புரமோஷன் எனத் துவங்கி, நேற்று படத்தின் கதாப்பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது, இன்று வெளியாகவிருக்கும் டிரெய்லர் என லைம்லைட்டில் இருந்துவருகிறது.
மற்ற நடிகர்களை கதாப்பாத்திரங்களின் பெயர்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் நடிகர் அஜித்தின் பெயரை யூகிக்குமாறு ரசிகர்களிடம் கேட்கப்பட்டது. பெரும்பாலானோர் அஜித்தின் பெயர் விநாயக் மகாதேவ், என்றும் அவரது கதாப்பாத்திரம் மங்காத்தா படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் எனவும் யூகித்துவருகின்றனர். டிரெய்லர் வெளியானால் அஜித்தின் பெயர் என்னவென்று தெரிந்துவிடும்.
பத்திரிகையாளர் மைபா நாராயணன் கதாபாத்திரத்தில் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் நடித்துள்ளார். நடிகர் பிரேம், பிரேம் என்ற தனது சொந்தப் பெயரிலேயே நடித்திருக்கிறார். மேலும் நடிகர் பக்ஸ், ராஜேஸ் என்ற வேடத்திலும், நடிகர் ஜான் கொக்கென், கிரிஷ் என்ற வேடத்திலும் ராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த வீரா, ராதா என்ற வேடத்திலும் நடிகர் ஜிஎம் சுந்தர் முத்தழகன் என்ற வேடத்திலும் தெலுங்கு நடிகர் அஜய், ராமசந்திரன் என்ற வேடத்திலும் நடித்துள்ளனர்.
பிரபல நடிகர் சமுத்திரக்கனி இந்தப் படத்தில் தயாளன் என்ற காவல் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை மஞ்சுவாரியர் கண்மணியாக நடித்திருக்கிறார். தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் படத்தைப் பகிர்ந்து அவரது பெயர் என்ன என்று யூகித்து சொல்லுங்கள் என ரசிகர்களிடம் கேட்டுள்ளனர். இதனையடுத்து அவரது ரசிகர்கள் ஏகே-வாக இருக்கும், விநாயக் மகாதேவாக இருக்கும் என தங்களது யூகங்களை பதிவிட்டுவருகின்றனர். டிரெய்லர் அப்டேட் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. பஞ்சாப்பில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு தகவல் வெளியாகியிருந்தது. மேலும் இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்ட கதாப்பாத்திரங்களைத் தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி, சிபி போன்றவர்களும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
துணிவு படம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஆக்சன் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளதாக இயக்குநர் வினோத் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் பரவையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் துணிவு படம் வெற்றியடைய பழனிக்கு சென்று தங்களால் இயன்ற அளவுக்கு புரோமோஷன் செய்து வருகின்றனர்.
படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகவுள்ள நிலையில் கண்மணியாக நடித்துள்ள மஞ்சு வாரியர் படம் தொடர்பாக அளித்த பேட்டிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதில், எனக்கு தமிழில் தான் ஸ்கிரிப்ட் கொடுத்தாங்க. எனக்கு தமிழ் படிக்கத் தெரியும் என்று அவர்களுக்கு தெரியும். அது நீங்களும் எங்களில் ஒருவர் தான், நீங்கள் வேறு யாரோ அல்ல என்று உணர்த்துவது போல இருந்தது. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு தமிழிலேயே ஸ்கிரிப்ட் படித்து வசனங்களை புரிந்துகொண்டேன் என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Manju Warrier, Thunivu