2021-22 ஆம் ஆண்டுக்கான வரியை முறையாக செலுத்தியதால் மலையாள நடிகை மஞ்சு வாரியாருக்கு "நேர்மையாக வரி செலுத்துபவர் " என்ற நற்சான்றிதழை வழங்கியுள்ளது மத்திய அரசு.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மஞ்சு வாரியர். நாகர்கோவிலில் பிறந்த இவர், மலையாள திரையுலகில் நுழைந்த 3 ஆண்டுகளில் 20 படங்களில் நடித்தார். அவரது முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து மளமளவென படவாய்ப்புகள் குவிந்து உச்சத்திற்கு சென்றார். பின்னர் நடிகர் திலீப்பை திருமணம் செய்துக் கொண்டு, திரையுலகில் இருந்து விலகியிருந்த மஞ்சு வாரியர் அவருடன் விவாகரத்தான பிறகு 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரியானார்.
தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் அஜித் குமாரின் ஏகே61 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இவர், கரதம், வெள்ளரிப்பட்டணம், ஆயிஷா ஆகிய ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
90’ஸ் கிட்ஸ்களுக்குப் பிடித்த சக்திமான் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் ஜிஎஸ்டி மற்றும் வரிக் கணக்குகளை உரிய நேரத்தில் சமர்ப்பித்ததற்காக நடிகை மஞ்சு வாரியருக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சரியாக வரி செலுத்துபவர்களுக்கு மத்திய அரசு வழங்கும், ‘நேர்மையாக வரி செலுத்துபவர்’ சான்றிதழை அவர் பெற்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Manju Warrier