ஆயிஷா என்ற திரைப்படத்திற்கு பிரபுதேவா நடன அமைப்பில் மஞ்சு வாரியர் நடனமாடியுள்ள பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகை மஞ்சு வாரியர் தற்போது ஆயிஷா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தில் ஜெயச்சந்திரன் இசையில் உருவாகி இருக்கும் கண்ணிலு கண்ணிலு என்ற பாடல் இடம்பெறுகிறது. அந்தப் பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் பிரபு தேவா நடனம் அமைத்தார்.
மஞ்சு வாரியர் நடனமாடும் அந்த பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பான நடன அசைவுகளை மஞ்சு வாரியர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, பிரபுதேவாவின் சாயலில் அவர் நடனமாடி இருக்கிறார்.
Read More: இசையமைப்பாளராக மிஷ்கின்.. 'டெவில்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!
அந்த பாடல் வீடியோ தற்போது youtube-ல் வெளியிடப்பட்டுள்ளது. 44 வயதில் மஞ்சு வாரியர் நடனமாடியுள்ள கண்ணிலு கண்ணிலு பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற தொடங்கியுள்ளது.
Here's the video song from #Ayisha for you! ❤️
More than a dream come true working with @PDdancing Sir on this song! Hope you all love it! https://t.co/FhYn9GYL2y pic.twitter.com/QTdrP7HSLS
— Manju Warrier (@ManjuWarrier4) October 13, 2022
ஆயிஷா படம் தவிர, கரதம், வெள்ளரிப்பட்டணம், ஆகியப் படங்களை மஞ்சு வாரியர் கைவசம் வைத்துள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மஞ்சு வாரியர். இவர், மலையாள திரையுலகில் நுழைந்த 3 ஆண்டுகளில் 20 படங்களில் நடித்தார்.அவரது முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து மளமளவென படவாய்ப்புகள் குவிந்து உச்சத்திற்கு சென்றார்.பின்னர் நடிகர் திலீப்பை திருமணம் செய்துக் கொண்டு, திரையுலகில் இருந்து விலகியிருந்த மஞ்சு வாரியர் அவருடன் விவாகரத்தான பிறகு 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரியானார்.
தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் அஜித் குமாரின் ஏகே61 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Manju Warrier, Prabhu deva