வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது.
ஜிப்ரான் இசையில் இப்படத்திலிருந்து நேற்று காசே தான் கடவுளடா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. வைசாக் எழுதி பாடியுள்ள இப்பாடலை நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து பாடியுள்ளார்.
Lyrical video of Kasethan Kadavulada from #Thunivu is out. For those who are worried about not hearing my voice in it, don't worry, it was recorded for the video version. Thank you for your concern. Enjoyed the fun trolls!
Love 😊❤️https://t.co/9oqTiEYVzc
— Manju Warrier (@ManjuWarrier4) December 18, 2022
'மஞ்சு வாரியரின் குரலே கேட்கவில்லை' என விமர்சனங்கள் எழ, தனது ட்விட்டர் பக்கத்தில் மஞ்சு வாரியர் விளக்கம் அளித்துள்ளார். அதில், 'என் குரல் கேட்கவில்லை என சொல்பவர்களுக்கு, கவலைப்படாதீர்கள் என் குரல் வீடியோ வெர்ஷனுக்காக ரெக்கார்டு செய்யப்பட்டது. உங்கள் அக்கறைக்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.
துணிவு படத்தில் நடிகர் அஜித் குமார் மற்றும் மஞ்சு வாரியருடன் பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி, மாஸ்டர் மூலம் பிரபலமான சிபி புவன சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் சிபி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்ணாடி ஒன்றைப் பகிர்ந்து, ''காசேதான் கடவுளடா பாடல் படமாக்கப்பட்டபோது நடிகர் அஜித் குமார் இதனை பரிசளித்தார். இதனை எப்பொழுதும் பொக்கிஷமாக வைத்திருப்பேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Manju Warrier