முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித் பற்ற வைத்த பைக் ஆசை.. புது BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியர்.. நன்றி சொல்லி ட்விட்டர் பதிவு!

அஜித் பற்ற வைத்த பைக் ஆசை.. புது BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியர்.. நன்றி சொல்லி ட்விட்டர் பதிவு!

 மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர்

துணிவு பட நடிகை மஞ்சு வாரியர் கொச்சியில் BMW பைக்கை வாங்கி ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் மூலம் பிரபலமானார்.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்தது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ளார்.  ஆக்சன் ஃபார்முலாவில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு ஓய்வு நேரங்களில் 'பைக்' பயணம் மேற்கொள்ளும் அஜித்குமார் 'துணிவு' படப்பிடிப்பு சமயத்திலும் வட இந்தியாவில் பல பகுதிகளில் பைக்கில் சுற்றி வந்தார்.

இந்த 'பைக்' பயணத்தில் மஞ்சுவாரியரும் இணைந்தார். அஜித்குமாருடன் லடாக் பகுதியில் பைக் பயணம் செய்த புகைப்படங்களை மஞ்சுவாரியர் வலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மஞ்சுவாரியர் கடந்த மாதம் பைக் ஓட்டுவதற்கான ஓட்டுனர் உரிமத்தை பெற்று இருக்கிறார். எர்ணாகுளம் காக்கநாடு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேரில் சென்று அதிகாரி முன்னிலையில் பைக் ஓட்டி காண்பித்து ஓட்டுனர் உரிமத்தை அவர் பெற்றார். அவர் ஓட்டுனர் உரிமம் வாங்கிய புகைப்படமும் அந்த நேரத்தில் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதனை தொடர்ந்து தற்போது, நடிகை மஞ்சு வாரியர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலையுயர்ந்த BMW பைக் வாங்குவதை  வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த பைக்கை மஞ்சு வாரியர் கொச்சி BMW ஷோ ரூமில் வாங்கி கெத்தாக அதனை ஓட்டும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Manju Warrier