ஊரடங்கு உத்தரவு பதிவில் அநாகரிகமான கமெண்ட் - மஞ்சிமா மோகன் பதில்

ஊரடங்கு உத்தரவு பதிவில் அநாகரிகமான கமெண்ட் - மஞ்சிமா மோகன் பதில்
நடிகை மஞ்சிமா மோகன்
  • Share this:
144 தடை உத்தரவு குறித்து நடிகை மஞ்சிமா மோகன் பதிவிட்ட ட்வீட்டில் அநாகரிகமாக கமெண்ட் செய்துள்ளார் நெட்டிசன் ஒருவர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் நேற்று மாலை முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் இம்முயற்சியை நடிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் வரவேற்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களுக்கு ஏன் வீட்டில் இருப்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.


இந்த ட்வீட்டின் கமெண்ட் பகுதியில் நெட்டிசன் ஒருவர் அநாகரிகமாக நீயா எங்களுக்கு உணவளிப்பாய் என்று மஞ்சிமாவிடம் கேட்டிருந்தார்.

அந்த நெட்டிசனுக்கு பதிலளித்த மஞ்சிமா, நமக்கு மத்தியில் இப்படிப்பட்ட நபர்களும் இருக்கிறார்கள். வழக்கமாக இதுபோன்ற கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதில்லை. ஆனால் மக்களை வீட்டில் இருக்கச் சொன்னதற்கு எனக்கு கிடைத்த எதிர்வினை இதுதான்.

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பது யாருக்கும் எளிதான ஒன்று நீங்கள் நினைத்தால், அது தவறு சகோதரா. பணம் நமக்கு வானத்திலிருந்து கொட்டுவதில்லை” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: நீர்... நெருப்பு...ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்' மோஷன் போஸ்டர் ரிலீஸ்!


First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading