ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது - எப்போ தெரியுமா?

பொன்னியின் செல்வன் திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது - எப்போ தெரியுமா?

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

திரையில் பொன்னியின் செல்வன் படத்தை கண்டு ரசித்த பலரும் படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

  மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், அஷ்வின், ரஹ்மான் ஆகிய பல நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது.

  பிரபல எழுத்தாளர் கல்கி கிரிஷ்ணமூர்த்தி கைவண்ணத்தில் 1955ம் ஆண்டு எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. சோழ பேரரசரின் வெற்றிகள், திறமைகள், அரியணை ஏறுவதற்கு முன் அவர் சந்தித்த சிக்கல்கள் என நாவலில் உள்ளதை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

  பொன்னியின் செல்வன் திரைப்படம் தீபாவளி பண்டிகை வரை 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டு வந்தது. அந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்ததால், பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் அந்தப் படத்தை தொடர்ந்து திரையிட விரும்பினர்.

  Also read... உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா... ஹேப்பி பர்த்டே அதிதி ராவ்!

  இந்த படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதனை விஞ்சும் விதமாக படத்தின் திரைக்கதையும், மேக்கிங்கும், நடிகர்கள் வெளிப்படுத்திய அட்டகாசமான நடிப்பும் இருந்ததால் படம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை பொன்னியின் செல்வன் ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

  திரையில் இப்படத்தை கண்டு ரசித்த பலரும் படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் மாதம் 4-ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தப்படம் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Mani ratnam, OTT Release, Ponniyin selvan