முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Ponniyin Selvan: கொரோனா பரவலால் தள்ளிப்போன ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு

Ponniyin Selvan: கொரோனா பரவலால் தள்ளிப்போன ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு

பொன்னியின் செல்வன் திரைப்படம்

பொன்னியின் செல்வன் திரைப்படம்

இயக்குநர் மணிரத்னம் தான் இயக்கி வரும், பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

இயக்குநர் மணிரத்னம் தான் இயக்கி வரும், பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். கல்கியின் மாஸ்டர் பீஸ் சரித்திர நாவல் பொன்னியின் செல்வன். இதனை ஜெயமோகனின் திரைக்கதையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வருகிறார். இரு பாகங்களாக இந்த சரித்திரப் படம் தயாராகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் முந்தைய கட்ட படப்பிடிப்பு மார்ச்சில் முடிவடைந்தது. மே மாதம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வட மாநிலங்களில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். இப்போது அங்கு கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. மக்கள் கொத்து கொத்தாக மடிந்து வருகின்றனர். படப்பிடிப்பு நடத்த இது உகந்த நேரம் இல்லை. அதனால், படப்பிடிப்பு இடத்தையும், நாளையும் மாற்றியுள்ளார் மணிரத்னம்.

மே மாதத்துக்குப் பதில் ஜுனில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்குகிறார். வட மாநிலங்களுக்குப் பதில் சென்னை, ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கும். ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இதற்காக பிரமாண்ட அரங்குகள் தயாராகி வருகின்றன.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் முன் சென்னையில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு பொன்னியின் செல்வன் முதல்பாகம் திரைக்கு வருவதாக நடிகர் கார்த்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Vikram, Aishwarya Rai, Mani ratnam