Maniratnam: மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Maniratnam: மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பொன்னியின் செல்வன் திரைப்படம்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

    எழுத்தாளர் கல்கியின் மாஸ்டர் பீஸ் நாவலான பொன்னியின் செல்வனை மணிரத்னம் இயக்கி வருகிறார். இதற்கான திரைக்கதை, வசனத்தை ஜெயமோகன் எழுத, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார்.

    மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தவர்கள், கோவிட் வேகமாக பரவி வருவதால் அந்தத் திட்டத்தை கைவிட்டனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், சுல்தான் புரமோஷனில் கலந்து கொண்ட கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றிருப்பதாகவும், 2022 பொங்கலை முன்னிட்டு படம் திரைக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.

    பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கும் படம். வெளியீடு தள்ளிப் போனாலும் ஆச்சரியமில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: