Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் படம் குறித்த புதிய அப்டேட்..

பொன்னியின் செல்வன் படம் குறித்த புதிய அப்டேட்..

பொன்னியின் செலவ்ன்

பொன்னியின் செலவ்ன்

Maniratnam Movie Ponniyin Selvan : மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை இரு பாகங்களாக மணிரத்னம் எடுத்து வருகிறார். ஜெயமோகன் உள்பட பலர் இதன் திரைக்கதையில் பங்களிப்பு செலுத்தி உள்ளனர். முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

பொன்னியின் செல்வனில் டைட்டில் வேடத்தில் ஜெயம் ரவியும், வந்தியதேவனாக கார்த்தியும் நடித்துள்ளனர். ஜெயம் ரவியின் அண்ணனாக விக்ரம். இவர்களின் சகோதரி குந்தவையாக த்ரிஷா நடித்துள்ளார். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், அழ்வார்க்கடியானாக ஜெயராமும் வருகின்றனர். விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

நடிகை வித்யா சுப்பிரமணியம் தற்போது தனது பகுதிக்கான டப்பிங்கை பேசி வருகிறார்.சில வாரங்கள் முன்பு விக்ரம் பிரபு தனது காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்தார். சமீபத்திய தகவல், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோரும் தாங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளனர். பொன்னியின் செல்வனை லைகாவும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து தயாரிக்கின்றன.

also read : வலிமை தெலுங்குப் பதிப்பின் பெயர் தெரியுமா?


 பொதுவாக தனது படம் குறித்த எந்த செய்தியையும் மணிரத்னம் பகிர்ந்து கொள்வதில்லை. ஆர்ப்பட்டமான அறிவிப்போ, விழாக்களோ அவர் படங்களுக்கு இருப்பதில்லை. ஆனால், பொன்னியின் செல்வனின் இசை வெளியீட்டு விழாவை அவர் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த வருட கோடையில் படம் திரைக்கு வருகிறது.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Actor Jayam Ravi, Mani rathnam, Ponniyin selvan

அடுத்த செய்தி