ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் பாகுபலி படம் மாதிரி இருக்குமா? மணிரத்னம் பதில்...

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் பாகுபலி படம் மாதிரி இருக்குமா? மணிரத்னம் பதில்...

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

சரித்திர படம் என்றதுமே பொன்னியின் செல்வன், பாகுபலி படம் போல இருக்குமா என ரசிகர்களிடம் கேள்வி எழுந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் படம் பாகுபலி போல இருக்குமா என்ற கேள்விக்கு படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பதிலளித்திருந்தார் இயக்குநர் மணிரத்னம்.

  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி அதாவது நாளை வெளியாகிறது. படம் ஏற்கனவே திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

  இந்தப் படத்தில் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், பார்த்திபன், ரகுமான் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.

  சரித்திர படம் என்றதுமே பொன்னியின் செல்வன், பாகுபலி படம் போல இருக்குமா என ரசிகர்களிடம் கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பதிலளித்தார் இயக்குநர் மணிரத்னம். ”செக்க சிவந்த வானம் படம் முடிந்த பிறகு, லைகா சுபாகஸ்கரன் அடுத்ததா என்ன படம் செய்ய போகிறீர்கள் என்று கேட்டார். உடனே நான் பொன்னியின் செல்வன் எடுக்க வேண்டும் என்று ஆசை என்று சொன்னேன். 2 நிமிடம் யோசித்த அவர், சரி செய்வோம் என்றார். 2 நிமிடம் தான் ஆனது 70 வருட கனவை நிறைவேறுவதற்கு. உடனே அவர் என்ன இது பாகுபலி மாதிரி இருக்குமா? என்றார்.

  சோழ சாம்ராஜ்ஜியத்திற்காக எதையும் செய்யும் குந்தவை!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உடனே நான் நிச்சயம் அப்படி இருக்காது. பாகம் 1 மற்றும் 2 வேண்டுமென்றால் அதே போல இருக்கும் என்றேன். சரி... அப்படியென்றால், சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படம் மாதிரி இருக்குமா? என்றார். அப்படியும் இருக்காது, என்றேன். பின்னர் எப்படி இருக்கும் என்றார். இது கல்கி எழுதின மாதிரி இருக்கும் என்றேன். முடிந்த வரை அதைத்தான் முயற்சி செய்திருக்கிறோம்” என அப்போது தெரிவித்தார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Ponniyin selvan