ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் 2 படத்துக்காக மணிரத்னம் எடுத்த முக்கிய முடிவு!

பொன்னியின் செல்வன் 2 படத்துக்காக மணிரத்னம் எடுத்த முக்கிய முடிவு!

இயக்குனர் மணி ரத்னம்

இயக்குனர் மணி ரத்னம்

‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் 2 படத்துக்காக மீண்டும் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் மணிரத்னம்.

  இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறிய மணிரத்னத்தின் பிரம்மாண்டமான படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28, 2023 அன்று வெளியாகும் என இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் தற்போது சிலவற்றை மீண்டும் எடுக்க இயக்குனர் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் சில புதிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு 7 முதல் 10 நாட்கள் வரை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தயாரிப்பு பணிகள் அக்டோபரில் தொடங்கியது. இப்போது எடிட்டிங்கிற்குப் பிறகு, சில காட்சிகளை மீண்டும் எடுக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளாராம். இருப்பினும் இது குறித்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

  தங்கையின் பாசாங்கு இல்லாத நடிப்பு... குஷி கபூரை புகழ்ந்த ஜான்வி கபூர்!

  ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Mani ratnam, Ponniyin selvan