Home /News /entertainment /

Ponniyin Selvan Trailer : பிரமாண்டத்தின் உச்சம்… பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியானது…

Ponniyin Selvan Trailer : பிரமாண்டத்தின் உச்சம்… பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியானது…

பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் போஸ்டர்

பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் போஸ்டர்

PS 1 Trailer : இன்று நடைபெற்ற Ponniyin Selvan ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    இதையொட்டி இன்று நடைபெற்ற ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்.

    படத்தில் இடம்பெற்றுள்ள விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, நடிகைகள் ஐஷ்வர்யாராய், த்ரிஷா, ஐஷ்வர்யலெட்சுமி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

    ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழில் வெளியான ட்ரெய்லருக்கு கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதை தவிர்த்து மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

    பொன்னியின் செல்வன் ட்ரெய்லரைப் பார்க்க...



    3 நிமிடங்கள் 23 வினாடிகள் ஓடக் கூடியதாக பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் கட் செய்யப்பட்டுள்ளது.

    பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

    பொன்னியின் செல்வன் டீசர் 



    பொன்னி நதி பாடல்



    சோழா சோழா பாடல்



    முன்னதாக பொன்னியின் செல்வன் படத்திற்கான டீசர், பொன்னி நதி மற்றும் சோழா சோழ ஆகிய 2 பாடல்கள் வெளியிடப்பட்டன.

    Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்!

    கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் படமாக்கியுள்ளார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ் - தெலுங்கு - இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

     
    Published by:Musthak
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி