ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

2 நாட்களில் ரூ. 150 கோடி வசூலை தாண்டிய பொன்னியின் செல்வன்… வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு

2 நாட்களில் ரூ. 150 கோடி வசூலை தாண்டிய பொன்னியின் செல்வன்… வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

நாவலைப் படித்தவர்களும் பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறப்பாக வெளிவந்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான 2 நாட்களில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துசாதனை படைத்துள்ளது. அடுத்தடுத்த நாட்களிலும் முன்பதிவு அதிகரித்து வருவதால் வசூலில் இந்த திரைப்படம் புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நாவலைப் படித்தவர்களும் பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறப்பாக வெளிவந்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த படத்தின் புரொமோஷனுக்காக இயக்குனர் மணி ரத்னம், ஏ.ஆர். ரகுமான், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் பல்வேறு நகரங்களுக்கு சென்று படத்தை பிரபலப்பத்தினர்.

  இந்நிலையில் படம் வெளியான முதல் நாளன்று பொன்னியின் செல்வன் ரூ. 80 கோடி வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது 2 நாட்களில் இந்த படத்தின் வசூல் ரூ. 150 கோடியை தாண்டியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  அமெரிக்காவில் வசூலில் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்… கலெக்சன் எவ்வளவு தெரியுமா?

  இந்தி வட்டாரத்தில் எதிர்பார்த்த வசூலை குவிக்காவிட்டாலும் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் பொன்னியின் செல்வன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் 3 நாட்களில் மட்டும் 41 லட்சம் அமெரிக்க டாலர் வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

  1955-ல் கல்கி எழுதி பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு கோடையின்போது வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  நிகில் முருகன் ஹீரோவாக நடிக்கும் 'பவுடர்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா….

  படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி, பிரபு, பிரகாஷ் ராஜ், நாசர், லால், ஜெயராம், கிஷோர், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  தமிழில் உருவாக்கப்பட்ட மிகப்பெரும் மல்டி ஸ்டார் படமாக பொன்னியின் செல்வன் கருதப்படுகிறது. இந்த படத்தில் சில காட்சிகளுக்கு கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்திருந்தார்.

  லைகா நிறுவனத்துடன் இணைந்து மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. ரவி வர்மனின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் புரொடக்சன் டிசை மற்றும் ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் உள்ளிட்டவை பாராட்டைப் பெற்றுள்ளன.

  Published by:Musthak
  First published:

  Tags: Ponniyin selvan