மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே ஆர்வம் சற்று குறைவாகவே இருக்கிறது. காரணம் கடந்த சீசன்களைக் காட்டிலும் பங்கேற்ற போட்டியாளர்கள் ரசிகர்களை பெரிதும் கரவில்லை என்று கூறப்படுகிறது. முதல் எலிமினேஷனில் நாய் சேகர் பட இயக்குநர் கிஷோர் வெளியேற இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்ட் என்பதால் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தற்போது வெளியான புதிய புரமோவில் விஜே விஷால் மற்றும் மைம் கோபி ஆகியோர் ஃபேஷ் ஆஃப் குக்கிங்கிற்கு செல்வதாக காட்டப்படுகிறது.
இந்த நிலையில் 3 சீசன்களாக கலக்கிய மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில்,''இன்று என்னுடைய கடைசி எபிசோட். நான் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் என் முதல் எபிசோடிலிருந்து என்னுடைய எல்லா பெர்ஃபாமன்ஸ்களுக்கும் நீங்கள் அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
எனக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் நான் அதிக கவனம் செலுத்தி சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறேன். குக் வித் கோமாளியில் உங்களை கொஞ்சம் மகிழ்வித்திருப்பேன் என நம்புகிறேன். நான் இனிமேலும் உங்கள் அன்பை எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் விலகுவதற்கான காரணத்தை மணிமேகலை அறிவிக்கவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv