Home /News /entertainment /

நடிகர்களுக்கு அதிக சம்பளம் தருவது தயாரிப்பாளர்களின் விருப்பம் - மணிரத்னம்!

நடிகர்களுக்கு அதிக சம்பளம் தருவது தயாரிப்பாளர்களின் விருப்பம் - மணிரத்னம்!

மணிரத்னம்

மணிரத்னம்

ஹாலிவுட் திரைப்படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரவேற்பை பெரும்போது கன்னட திரைப்படங்கள் ஏன் அப்படி வரவேற்பை பெறக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.

    தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது தயாரிப்பாளர்களின் விருப்பம் என இயக்குனர் மணிரத்னம் பேசியுள்ளார்.

    சினிமா தயாரிப்பு செலவை குறைக்கும் வண்ணம் Honey flicks எனப்படும் புதிய மென்பொருள் ஒன்றை இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் பிரஷாந்த் ஆகியோர் தயாரிப்பாளர் டிஜி தியாகராஜனுடன் இணைந்து அறிமுகம் செய்து வைத்தனர். இந்த விழாவில் பேசிய இயக்குனர் மணிரத்னம் பிற மொழி திரைப்படங்கள் தமிழில் நல்ல வரவேற்பை பெறுவது குறித்து பேசினார்.

    அப்போது, தமிழ் சினிமாவில் சந்திரலேகா உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி பிறமொழி ரசிகர்களை கவர்ந்தது போல, தற்போது பிறமொழி படங்கள் தமிழ் ரசிகர்களை கவர்வதாக குறிப்பிட்டார். ஹாலிவுட் திரைப்படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரவேற்பை பெரும்போது கன்னட திரைப்படங்கள் ஏன் அப்படி வரவேற்பை பெறக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.

    பிக் பாஸ் தாமரைச் செல்வி வீட்டிற்கு சென்ற பிரபலம் - லைக்ஸை அள்ளும் புகைப்படம்!

    நடிகர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தயாரிப்பாளர்கள் விரும்பிக் கொடுக்கும் சம்பளத்தை பற்றி பேச முடியாது எனவும், தயாரிப்பாளர்களின் விருப்பம் அது எனவும் தெரிவித்தார்.

    மேலும் அண்மையில் RRR, KGF திரைப்படங்கள் தமிழில் வரவேற்பை பெற்றது போல், தமிழ் படங்கள் பெரிய வெற்றி பெறவில்லையே என கேள்வி எழுப்பிய போது நல்ல படங்கள் எடுத்தால் ஓடும் என பதிலளித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: KGF 2, Mani ratnam

    அடுத்த செய்தி