Ponniyin Selvan: அடுத்தாண்டு வெளியாகும் ’பொன்னியின் செல்வன்’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பொன்னியின் செல்வன்

'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்துக்கான போஸ்டரைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

  • Share this:
    இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் 2022-ல் வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    இயக்குநர் மணிரத்னம் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.



    பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கப்படுவதற்கு முன்பு ஒரே ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு போஸ்டரும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது 'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்துக்கான போஸ்டரைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். அதில் 2022-ம் ஆண்டு படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உட்புற காட்சிகளை படமாக்கிய நிலையில் தற்போது வெளிப்புற படப்பிடிப்பில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: