பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க தளபதி விஜய், மகேஷ்பாபு, கார்த்தி ஆகியோர் தான் முதலில் மணிரத்னத்தின் சாய்ஸாக இருந்திருக்கிறார்கள்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற தமிழ் இலக்கிய நாவலை அடிப்படையாகக் கொண்டு படம் இயக்க வேண்டும் என்பது மூத்த இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு. பொன்னியின் செல்வனை திரைப்படமாக மாற்ற பலமுறை முயற்சித்தாலும், பட்ஜெட் மற்றும் நடிகர்கள் பிரச்சனை காரணமாக அது நிறைவேறவில்லை. தற்போது ஒருவழியாக அந்த கனவு நிறைவேறி வரும் செப்டம்பர் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் வெளியாகவிருக்கிறது.
பொன்னியின் செல்வன் அனைவரது இதயங்களிலும் தனி இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு இலக்கிய நாவல். இயற்கையாகவே, சோழ மன்னன் அருள்மொழி வர்மன் என்றழைக்கப்படும் ராஜராஜ சோழனின் புகழ்பெற்ற வாழ்க்கை மணிரத்னத்தின் கவனத்தை ஈர்த்தது. இது குறித்து அவரது உதவியாளர் தனா முன்பு அளித்த பேட்டியில் கூறுகையில், மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை 2010ல் எடுக்க விரும்பியதாக தெரிவித்தார்.

மகேஷ்பாபு - மணிரத்னம் - விஜய்
தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த தனா (படை வீரன் மற்றும் வானம் கொட்டட்டும் படங்களின் இயக்குனர்), பொன்னியின் செல்வன் படத்தின் முன் தயாரிப்பு பணிகளை மணிரத்னமும் எழுத்தாளர் ஜெயமோகனும் 2010ல் தொடங்கினர். அவரது உதவியாளர்களிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெற்றதாக தெரிவித்தார். அதோடு பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க மகேஷ் பாபு, தளபதி விஜய் மற்றும் கார்த்தி ஆகியோரை மணிரத்னம் அணுகியதாகவும் அவர் தெரிவித்தார்.
விஜய்யின் வாரிசு முதல் பாடல் குறித்த சூப்பர் அப்டேட்!
மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி, தளபதி விஜய் மற்றும் மகேஷ் பாபு இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதாக தெரிவித்தார். இருப்பினும், அந்தப் படம் தொடங்குவதற்கு முன்பே அதை கைவிட முடிவு செய்தார் மணிரத்னம். விஎஃப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் இப்போது இருப்பதைப் போல அப்போது அட்வான்ஸ்டாக இல்லை என்று உணர்ந்ததால், மணிரத்னம் அந்தப் படத்தைக் கைவிட்டதாக சுஹாசினி விளக்கினார்.
ஒரு முன்னணி தமிழ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த மகேஷ் பாபு இதை உறுதிப்படுத்தி, "படப்பிடிப்புக்கு ஏழு நாட்களுக்கு முன்பு, சென்னையில் விஜய்யுடன் போட்டோ ஷூட் நடந்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்தப் படம் கைவிடப்பட்டது. இப்போது கூட, நான் விஜய்யுடன் நெருக்கமாக இருக்கிறேன். அவர் எனக்கு நல்ல நண்பர்” என்றார்.
ஆம்... நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் - விஷால்
இப்போது மணிரத்னத்தின் கனவு நனவாகி விட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளத்தையே நடிக்க வைத்திருக்கிறார். ஐஸ்வர்யா ராய் பச்சன், சியான் விக்ரம், த்ரிஷா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜெயராம் மற்றும் பலர் துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.