ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அடிவாங்கும் தீபாவளி ரிலீஸ் படம்.. மீண்டும் வேகமெடுக்கும் பொன்னியின் செல்வன்.. அதிகரிக்கும் தியேட்டர்கள்!

அடிவாங்கும் தீபாவளி ரிலீஸ் படம்.. மீண்டும் வேகமெடுக்கும் பொன்னியின் செல்வன்.. அதிகரிக்கும் தியேட்டர்கள்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன், சர்கார் திரைப்படங்களுக்கு திரையரங்குகள் அதிகரிப்பு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார்  திரைப்படங்களுக்கான திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.

  மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தீபாவளி பண்டிகை வரை 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டு வந்தது. அந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்ததால், பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் அந்தப் படத்தை தொடர்ந்து திரையிட விரும்பினர். ஆனால் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.

  பொன்னியின் செல்வன்

  இதன் காரணமாக சிலர் புதிய திரைப்படங்கள் திரையிட்டனர். அதில்  சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் 410 திரையரங்குகளிலும்,  சர்தார் 380  திரையரங்குகளிலும் திரையிடப்பட்டன. இதன் காரணமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் திரையரங்குகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டன.  எனவே, தீபாவளி சமயத்தில் 220 திரையரங்குகளில் மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. இதன் காரணமாக இரண்டாவது வாரத்தில் அந்தப் படத்திற்கான திரையரங்குகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

  கமல் முதல் தனுஷ் வரை! பார்ட்-2 படங்களை கையில் வைத்திருக்கும் 10 பிரபல நடிகர்கள்.!

  அதேபோல் சர்தார் திரைப்படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.  அந்த திரைப்படத்திற்கு 380 லிருந்து 500 திரையரங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளன.  அதேபோல் 220 திரையரங்குகளில் திரையிடப்பட்டு வந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மேலும் 75 திரையரங்குகள் உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் காரணமாக ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 300 திரையரங்குகளில் தற்போது திரையிடப்படுகிறது.

  சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதன் காரணமாக திரையரங்குகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


  Published by:Murugadoss C
  First published:

  Tags: Deepavali, Ponniyin selvan