Navarasa: ஆகஸ்டில் வெளியாகும் மணிரத்னத்தின் நவரசா!

இயக்குநர் மணிரத்னம்

இந்த ஒன்பது கதைக்கும் பி.சி.ஸ்ரீராம், பாலசுப்பிரமணியம், மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன், ராமானுஜம் உள்பட 11 பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

  • Share this:
    மணிரத்னமும், க்யூப் சினிமாஸும் இணைந்து நவரசா என்ற ஆந்தாலஜியை தயாரித்து வருகின்றனர். நெட்பிளிக்ஸுக்காக இந்த ஆந்தாலஜி தயாரிக்கப்படுகிறது. ஒன்பது பேர், ஒன்பது தனித்தனி கதைகளை இதற்காக இயக்குகின்றனர். தற்போது, அதன் வெளியீடு குறித்து முக்கிய தகவலை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பகிர்ந்துள்ளார்.

    நவரசாவில் இடம்பெறும் ஒன்பது கதைகளில் ஒரு கதையை ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்குகிறார். இதில் சித்தார்த், பார்வதி, அம்மு அபிராமி நடிக்கின்றனர். இரண்டாவது கதையை அரவிந்த்சாமி இயக்குகிறார். ஸ்ரீ ராம் இதில் நடிக்கிறார். அரவிந்த்சாமி இயக்குனராகும் முதல் (குறும்) படம் இது.

    மூன்றாவது கதையை இயக்குகிறவர் ஹலிதா ஷமீம். பூவரசம் பீப்பீ, சில்லுக்கருப்பட்டி, ஏலே படங்களை இயக்கியவர். இவரது கதையில் யோகி பாபு முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். நான்காவது கதையை கௌதம் வாசுதேவ மேனன் இயக்க, சூர்யா நடிக்கிறார்.

    ஐந்தாவதை பிஜோய் நம்பியார் இயக்குகிறார். விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி இதில் நடிக்கின்றனர்.
    ஆறாவது கதையை ப்ரியதர்ஷன் இயக்க, விக்ராந்த், யோகி பாபு மணிக்குட்டன் ஆகியோர் நடிக்கின்றனர்.
    கார்த்திக் நரேன் ஏழாவது கதையை இயக்க, அரவிந்த்சாமி, பிரசன்னா, சாய் சித்தார்த், பூர்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எட்டாவது கதையை கார்த்திக் சுப்பாராஜ் இயக்குகிறார். நடிப்பது பாபி சிம்ஹா, சனந்த். கடைசி கதையை வஸந்த் இயக்குகிறார். அதிதி பாலன் இதில் முக்கிய வேடமேற்றுள்ளார்.

    இந்த ஒன்பது கதைக்கும் பி.சி.ஸ்ரீராம், பாலசுப்பிரமணியம், மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன், ராமானுஜம் உள்பட 11 பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். முதலில் ஒப்பந்தமான சிலர், வேறு காரணங்களால் விலக வேண்டி வந்ததால் ஒன்பதாக இருக்க வேண்டிய எண்ணிக்கை பதினொன்றானது.

    ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரான் ஈதன் யோஹன்னான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இதில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கதைக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ஆகஸ்டில் நவரசா நெட்பிளிக்ஸில் வெளியாவதாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மணிரத்னம் தனது படைப்புகள் குறித்து எதுவும் பேசுவதில்லை. பெரும்பாலும் அதில் பாடல்கள் எழுதும் வைரமுத்துவே தகவல்களை பகிர்வார். இந்த முறை பி.சி.ஸ்ரீராம் அதை செய்துக் கொண்டிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: