Mani Ratnam: ஆகஸ்ட் 6-ம் தேதி மணி ரத்னத்தின் நவரசா வெளியீடு!

நவரசா

ஒன்பது பேரும் தனித்தனியாக இயக்கிய படங்களின் தொகுப்பே நவரசா.

  • Share this:
    மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், க்யூப் சினிமாஸுடன் இணைந்து தயாரித்திருக்கும் நவரசா ஆந்தாலஜி வெப் தொடர் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியாகிறது.

    கோபம், ஆசை, சோகம் போன்ற ஒன்பது குணங்களை குறிப்பது நவரசா. இதன் அடிப்படையில் மணிரத்னத்தின் யோசனையில் உருவாகியிருக்கும் வெப் தொடர் நவரசா. ரதீந்திரன் ஆர்.பிரசாத், அரவிந்த்சாமி, கௌதம் வாசுதேவ மேனன், கார்த்திக் நரேன், பிஜோய் நம்பியார், ஹலிதா ஷமீம், ப்ரியதர்ஷன், கார்த்திக் சுப்பாராஜ், வஸந்த் ஆகியோர் நவரசாவில் பங்களிப்பு செய்துள்ளனர். இவர்கள் ஒன்பது பேரும் தனித்தனியாக இயக்கிய படங்களின் தொகுப்பே நவரசா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சூர்யா, சித்தார்த், அரவிந்த்சாமி, விக்ராந்த், பார்வதி, பிரசன்னா, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி, பாபி சிம்ஹா, அதிதி பாலன் உள்பட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரான் ஈதன் யோஹன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
    முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் பங்களிப்பில் தயாராகியிருப்பதால் நவரசா வெப் தொடருக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்த நவரசா வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: