Home /News /entertainment /

Mandira Bedi: பிரபல கிரிக்கெட் தொகுப்பாளினியும், நடிகையுமான மந்திரா பேடியின் கணவர் மரணம்

Mandira Bedi: பிரபல கிரிக்கெட் தொகுப்பாளினியும், நடிகையுமான மந்திரா பேடியின் கணவர் மரணம்

கணவருடன் மந்திரா பேடி

கணவருடன் மந்திரா பேடி

குடும்பத்தினர் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை என்றாலும், நடிகர் ரோஹித் போஸ் ராய், ராஜின் திடீர் மறைவு செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

    பிரபல நடிகையும், கிரிக்கெட் தொகுப்பாளினியுமான மந்திரா பேடி தனது கணவர் ராஜ் கெளஷலை இன்று அதிகாலை இழந்தார்.

    ராஜ் மாரடைப்பால் இறந்து இறந்ததாக கூறப்படுகிறது. இயக்குநரான இவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இறந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) தான், ராஜ் மற்றும் மந்திரா ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்துக் கொண்டனர். அதற்குள் இப்படியொரு சம்பவத்தை நம்ப முடியாமல் தவிக்கிறார்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஞாயிற்றுக்கிழமை மாலை மகிழ்ச்சியான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துக் கொண்டார் ராஜ். அதில் அனைவரும் புன்னகைத்து போஸ் கொடுத்ததைக் காண முடிந்தது. இப்போது, அவர் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. குடும்பத்தினர் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை என்றாலும், நடிகர் ரோஹித் போஸ் ராய், ராஜின் திடீர் மறைவு செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

    2003 கிரிக்கெட் உலகக்கோப்பை, 2004 சாம்பியன்ஸ் கோப்பை, 2009 ஐ.பி.எல் ஆகிய கிரிக்கெட் தொடர்களிலும் தொகுப்பளினியாக இருந்துள்ளார் மந்த்ரா. 2004-ல் சிம்பு நடிப்பில் வெளி வந்த மன்மதன் படத்தில் டாக்டராக நடித்திருப்பர். பிளே பாயாக நடித்திருக்கும் சிம்பு, மந்த்ரா பேடியில் இருந்து தான், தனது பழிவாங்கும் வேட்டையை துவங்குவார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி