மண்டேலா 100-வது நாள் - கேக் வெட்டி கொண்டாடிய யோகி பாபு!

மண்டேலா 100வது நாள்

ஒரு தனிநபரின் வாக்குக்கு எத்தனை மதிப்பு உண்டு என்பதை அரசியல் நையாண்டியுடன் படம் சொன்னது.

 • Share this:
  மண்டேலா திரைப்படம் வெளியாகி 100 நாள்கள் ஆனதை கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு.

  முன்பு படங்கள் 175, 200 தினங்கள் என்று ஓடும். 100-வது நாளுக்குதான் விழா எடுப்பார்கள். இப்போது நிலைமை தலைகீழ். ஒருவாரம் தாக்குப் பிடித்தாலே சக்சஸ் பார்ட்டி கொண்டாடுகிறார்கள். 25 நாள் ஓடினால் அது மாஸ் நடிகரின் படமாக இருக்கும். மண்டேலா இந்த வருடம் ஏப்ரல் 4-ம் தேதி விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. அடுத்து நெட்பிளிக்ஸில் வெளியிட்டார்கள். படத்துக்கு அமோக வரவேற்பு. இந்த வருடத்தின் சிறந்த படங்களில் மண்டேலா ஒன்று என்கிறவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

  ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் தயாரித்த மண்டேலாவை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். ஒரு தனிநபரின் வாக்குக்கு எத்தனை மதிப்பு உண்டு என்பதை அரசியல் நையாண்டியுடன் படம் சொன்னது. கதை நாயகனாக யோகி பாபு நடித்திருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மண்டேலா வெளியாகி 100 நாள்கள் ஆனiதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இதில் யோகி பாபு உள்பட படத்தில் பணியாற்றியவர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர். சின்ன பட்ஜெட்டில் வலிமையான கதையுடன் படம் எடுத்தால் அது பார்க்கவும், ரசிக்கவும் படும் என்பதற்கு மண்டேலா சமீபத்திய உதாரணம்.

  கேக் என்ன பட்டாசு வெடித்தே கொண்டாடலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: