ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மாநாடு வெற்றியால் மீண்டு(ம்) வந்த சிம்புக்கு அடுத்த நெருக்கடி!

மாநாடு வெற்றியால் மீண்டு(ம்) வந்த சிம்புக்கு அடுத்த நெருக்கடி!

சிம்பு மாநாடு

சிம்பு மாநாடு

மாநாடு திரைப்படத்தை வெளியிட பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதையும் வன்மையாக கண்டித்துள்ள பாரதிராஜா இதற்காக சுரேஷ் காமாட்சி டி ராஜேந்தர் மீது வழக்கு தொடர்ந்தால் என்னவாகும் எனும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகரும் சிலம்பரசனின் தந்தையுமான டி ராஜேந்தருக்கு எதிராக ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும் அணிதிரளும் சூழல் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் அண்மையில் மாநாடு திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரும் போராட்டங்களுக்குப் பிறகு வெளியான இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை என்று அழைக்கப்படும் தொலைக்காட்சி உரிமையை தன்னைக் கேட்காமல் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விற்று விட்டார் என டி ராஜேந்தர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தமிழ் திரை உலகில் உள்ள பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மாநாடு திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது டி ராஜேந்தர் படத்தின் பைனான்சியரிடம் ஜாமீன் கையெழுத்து போட்டு இருந்த நிலையில் அந்த கடனை சுரேஷ் காமாட்சி மீண்டும் செலுத்திவிட்ட நிலையில் டி ராஜேந்தர் படத்தின் சேட்டிலைட் உரிமையை கோருவது முறையல்ல என தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா டி ராஜேந்தருக்கு எதிராக பொங்கி எழுந்து உள்ளார். மாநாடு திரைப்படத்தை மிகுந்த சிரமத்திற்கு இடையே தயாரித்து இக்கட்டான சூழ்நிலையிலும் அதனை வெளியிட்ட தயாரிப்பாளருக்கு இவ்விதத்தில் நெருக்கடி அளிப்பது அழகில்லை என டி ராஜேந்தருக்கு அறிவுரை கூறியுள்ள பாரதிராஜா, விநியோகிஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து கொண்டு சினிமாவை நன்கு அறிந்த ஒருவர் இப்படி நடக்கலாமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சுரேஷ் காமாட்சி உடன் கலந்தாலோசிக்காமல் தெலுங்கு மொழியில் மாநாடு திரைப்படத்தை வெளியிட பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதையும் வன்மையாக கண்டித்துள்ள பாரதிராஜா இதற்காக சுரேஷ் காமாட்சி டி ராஜேந்தர் மீது வழக்கு தொடர்ந்தால் என்னவாகும் எனும் கேள்வி எழுப்பியுள்ளார். டி ராஜேந்தரின் இந்த செயலுக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள் அனைவரும் கூட்டாக தற்போது சிம்புவிற்கு எதிராக திரள தொடங்கியுள்ளனர். மாநாடு திரைப்படத்தின் வெற்றியால் மீண்டு வரும் சிம்புவிற்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Maanadu, Simbu, Tamil Cinema