11 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கில் நடிக்கும் மம்தா மோகன்தாஸ்!

11 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கில் நடிக்கும் மம்தா மோகன்தாஸ்!

மம்தா மோகன்தாஸ்

லால்பாக் படத்தை பிரசாந்த் முரளி இயக்க, மம்தா மோகன்தாஸ், ராகுல் மாதவ், சிஜோய் வர்க்கீஸ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

 • Share this:
  2010-ல் தெலுங்கில் நடித்த மம்தா மோகன்தாஸ், 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார்.

  2005-ல் மயூகம் மலையாளப் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் மம்தா மோகன்தாஸ். 2006-ல் கரு.பழனியப்பனின் சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுடன் நடித்தார். 2007-ல் யமதொங்கா தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். தமிழில் குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்தவர், கடைசி ஒன்பது வருடங்களில் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை.

  இதனிடையில் இருமுறை கேன்சர் பாதிப்புக்குள்ளானார் மம்தா. இருமுறையும் தைரியமாகப் போராடி தற்போது கேன்சரிலிருந்து முழுமையாக மீண்டுள்ளார். கேன்சருக்கு முன்பும் பின்பும் அவருக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் அளித்து ஆதரவாக இருந்தவர்களில் நடிகர் திலீப் முக்கியமானவர்.

  சுமார் 9 வருடங்களுக்குப் பிறகு தமிழில் விஷாலின் எனிமி படத்தில் நடித்துள்ளார் மம்தா மோகன்தாஸ். தெலுங்கில் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கேடி. நாகார்ஜுன் நடித்த இத்திரைப்படம் 2010-ல் வெளியானது. பதினொரு வருடங்கள் தெலுங்குப் படத்தில் நடிக்காமலிருந்த மம்தா, இந்த வருடம், லால்பாக் என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகிறது.

  லால்பாக் படத்தை பிரசாந்த் முரளி இயக்க, மம்தா மோகன்தாஸ், ராகுல் மாதவ், சிஜோய் வர்க்கீஸ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

  கேன்சர் பாதித்தவர்கள் பயப்பட தேவையில்லை. மருந்தும், மனோதைரியமும் இருந்தால் கேன்சரிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்பதற்கு மம்தா ஒரு வாழும் உதாரணம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: