தமிழ்நாட்டில் மைக் பிடித்து பேச பயம் - மம்மூட்டி!

தமிழ்நாட்டில் மைக் பிடித்து பேச பயம் - மம்மூட்டி!
நடிகர் மம்மூட்டி
  • Share this:
தமிழ்நாட்டில் மேடையில் மைக் பிடித்து பேசுவதற்கு பயமாக இருக்கிறது என்று நடிகர் மம்மூட்டி கூறியுள்ளார்.

பத்மகுமார் இயக்கத்தில் மம்மூட்டி, இனியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமங்கம். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகர் மம்மூட்டி, “தமிழ்நாட்டில் மேடையில் மைக்கை பிடித்து பேசுவதற்கு பயமாக தான் இருக்கிறது.
ஏனென்றால், சினிமாவில் சரியாக தமிழ் பேசி விடுவேன். ஆனால் மேடையில் தப்புதப்பாக பேசிவிடுவேன்.


திரைப்படங்கள் மூலம் வரலாற்று காவியங்களை பார்வையாளர்களிடம் கொண்டு செல்வது ஒரு கடமையாக நான் கருதுகிறேன். இன்று, நாம் வெவ்வேறு மொழி திரைப்படங்களைப் பார்க்கிறோம். நம்மை ஒன்றிணைப்பது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது சினிமா. அசல் பதிப்பில் கூட படம் தமிழுடன் மொழியியல் தொடர்பைக் கொண்டிருக்கும்.

படிக்க: சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’படத்தில் இன்னொரு ஹீரோ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மாமங்கம் ஒரு பழிவாங்கும் கதை அல்ல. இந்த படத்தை தமிழ் திரைப்படமாக உருவாக்க இயக்குநர் ராம் உறுதுணையாக இருந்தார். படத்தில் நான் பேசும் வசனங்கள் ராம் பேசுவது போலத்தான் இருக்கும். ஆனால் என்னைத் தமிழ் பேசவைக்க ராம் மிகவும் கஷ்டப்பட்டு விட்டார்” என்றார்.

Loading...

வீடியோ பார்க்க: இதுவரை பார்க்காத மீனாவை கரோலின் காமாட்சியில் பார்ப்பிங்க -மீனா

First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...