• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பரை நேரில் சென்று பாராட்டிய மம்முட்டி!

இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பரை நேரில் சென்று பாராட்டிய மம்முட்டி!

மம்முட்டி மற்றும் ஸ்ரீஜேஷ்

மம்முட்டி மற்றும் ஸ்ரீஜேஷ்

திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக மம்முட்டி அவருக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ். 

வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் எதிரணியனரின் பல கோல் முயற்சிகளை ஸ்ரீஜேஷ் வெற்றிகரமாக தடுத்து, தி வால் ஆஃப் இந்தியா என்று பாராட்டப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த அவருக்கு கேரள மாநில அரசு இரண்டு கோடிகள் பரிசு அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்ரீஜேஷின் வீடு கேரள மாநிலம் கிழக்கம்பலத்திலுள்ள பள்ளிக்கராவில் உள்ளது. நடிகர் மம்முட்டி திடீரென ஸ்ரீஜேஷின் வீட்டிற்கு வருகை தந்து அவருக்கு பூங்கொத்து அளித்தார்.



Also read... சிவா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்!

இந்த சந்திப்பின் போது ஸ்ரீஜேஷ் தனது குடும்பத்தினரை மம்முட்டிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக மம்முட்டி அவருக்கு பாராட்டுகள் தெரிவித்தார். ஸ்ரீஜேஷ் தனக்குக் கிடைத்த பதக்கத்துடன் மம்மட்டியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்நிஜ ஹீரோவை திரை ஹீரோ நேரில் வந்து வாழ்த்திய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: