• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அமலாவின் மகன் நடிக்கும் படத்தில் மம்முட்டி...!

அமலாவின் மகன் நடிக்கும் படத்தில் மம்முட்டி...!

அகில் அக்னேனி

அகில் அக்னேனி

ராணுவப் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். ஆக்ஷன் அதிரடிக்கு பெயர் போன இயக்குனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாகார்ஜுன் - அமலா தம்பதியின் மகன் அகில் அக்னேனியின் ஏஜென்ட் படத்தில் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

அகில் இதுவரை பெரிய ஹிட் படம் எதுவும் தரவில்லை. அவரது அமுல்பேபி தோற்றத்தால் கிளிஷேவான காதல்கதைகளே அதிகம் தேடி வந்தன. இந்நிலையில், உடற்பயிற்சி செய்து, சிக்ஸ்பேக் வைத்து ஏஜென்ட் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே மிரட்டியது. காரணம் அகிலின் புதிய தோற்றம்

ராணுவப் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். ஆக்ஷன் அதிரடிக்கு பெயர் போன இயக்குனர். படத்தின் முதல் ஷெட்யூல்டை முடித்து, இரண்டாவது ஷெட்யூல்டை சமீபத்தில் தொடங்கினர். விரைவில் படப்பிடிப்புக்காக ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்ட் செல்லவள்ளனர்.

Also read... ஆஸ்கர் ரேஸில் மண்டேலா உள்பட 14 படங்கள்...!

ஏஜென்டில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. தற்போது அவர் ராணுவ அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் கதை கேட்டு, கதாபாத்திரம் பிடித்த பின்பே மம்முட்டி நடிக்க ஒப்புக் கொண்டதாக சுரேந்தர் ரெட்டி கூறியுள்ளார்

இதற்கு முன் ஜுனியர் என்டிஆரின் ஜனதா கராஜ் திரைப்படத்தில் மோகன்லால் நடித்திருந்தார். அல்லு அர்ஜுனின் புஷ்பாவில் பகத் பாசில் வில்லனாக நடித்து வருகிறார். இப்போது மம்முட்டியும் அவர் பங்குக்கு ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: