ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

"என் டைரக்ஷனில் நடிக்க மறுத்த மம்மூட்டி"- சுவாரசியம் பகிரும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி

"என் டைரக்ஷனில் நடிக்க மறுத்த மம்மூட்டி"- சுவாரசியம் பகிரும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மற்றும் நடிகர் மம்முட்டி

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மற்றும் நடிகர் மம்முட்டி

மம்முட்டி மாதிரி ஒரு ஈகோவன மனிதனை பாக்க முடியாது. அவ்ளோ ஈகோவுடைய மனிதர்.ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  90-களில் முன்னணி இயக்குநராக திகழ்ந்தவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. பின்னர் FEFSI-யின் (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) தலைவராக ஆனார். பல நெருக்கடிகளின் போதும் சினிமா தொழிலாளர்கள் பக்கம் நின்றார்.

  ஆர்.கே.செல்வமணி சமீபத்தில் அளித்த நேர்காணலில் கூறியதாது- "புது முகங்களை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டேன். மூன்றாவது படம் கதாநாயகன் இல்லாமல் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

  மம்முட்டி மாதிரி ஒரு ஈகோவான மனிதனை பார்க்க முடியாது. அவ்வளவு ஈகோவுடைய மனிதர். ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதர்.  எப்படி விஜயகாந்த் ஒரு உச்ச நடிகரோ, அதே மாதிரி தன மம்முட்டி. ஆனா ஒழுக்கத்தில் சிறந்தவர். ஆனா ஈகோ கொஞ்சம் அதிகம்.

  இதற்கு முன் நான் மம்முட்டிவுடன் படம் பண்ணது இல்லை. இதற்கு முன் பணியாற்றியதும் இல்லை. இரண்டு நாள் ஒர்க் ஷூட்டிங் செய்தோம்.

  பின்பு 8 மாதத்துக்கு பிறகு மீண்டும் ஷூட்டிங்

  தொடங்கினோம். இதே மம்முட்டியிடம், நான் பல தோல்வி படங்களை குடுத்த பிறகு ஒரு கதை அவரிடம் சொனேன். கதை ஒகே செய்யலாம் என்று சொன்னார்.

  Read More: வெளியீட்டுக்கு முன்பே பல கோடி வசூலித்த கார்த்தியின் சர்தார்!

  அட்வான்ஸ் வேண்டாம் இப்பொழுது உங்களுக்கு கஷ்டமாக இருக்கும் என்றார். 40 லட்சம் கொடுத்தார் படம் எடுக்க. படம் வெளியான பிறகு திரும்ப கொடுத்தால் போதும் என்றார். எவளோ பேர் இதை செய்வார்கள் என்று தெரியவில்லை.அந்த நட்பு இன்று வரைக்கும் தொடர்கிறது

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actress Roja, Kollywood, Tamil Cinema