மம்முட்டி நடிப்பில் சென்ற வாரம் பீஷ்ம பர்வம் திரைப்படம் வெளியானது. அமல் நீரத் இயக்கிய மலையாள படமான இது இதுவரை வெளியான அனைத்து மலையாள படங்களின் முதல் வார இறுதி வசூலை முறியடித்துள்ளது. திரையிட்ட இடங்களிலெல்லாம் படம் மெகா வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கில் அகில் அக்னேனி நடிக்கும் ஏஜென்ட் படத்தில் மம்முட்டி நடிப்பதை உறுதி செய்துள்ளனர்.
நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகனாக அகில் அக்னேனி இதுவரை ரொமான்டிக் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து வந்தார். அதற்கு ஏற்ப அவரது முகமும், உடற்கட்டும் இருந்தது. தற்போது உடற்பயிற்சி செய்து மினி அர்னால்டாக மாறி ஏஜென்ட் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
பிளாட் ஃபார்முக்கு வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரகேசர் - காரணம் என்ன?
இந்தப் படத்தில் முக்கியமான
வேடம் ஒன்றில் மம்முட்டி நடிப்பார் என கூறப்பட்டது. அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மம்முட்டி இடம்பெறும் போஸ்டர் ஒன்றை ஏஜென்ட் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் தி டெவில் ரூத்லெஸ் சேவியர் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ராணுவ அதிகாரியாக இதில் மம்முட்டி நடிப்பதாக கூறப்படுகிறது.
தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு... செல்வராகவன் படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!
சுரேந்தர் ரெட்டி திரைப்படத்தை இயக்கி வருகிறார். சாக்ஷி வைத்யா நாயகியாக நடிக்கிறார். தமிழ் தவிர்த்து அரிதாகவே வேற்று மொழி
திரைப்படங்களில் மம்முட்டி நடித்துள்ளார். 2019-ல் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி வாழ்க்கை வரலாறான யாத்ரா படத்தில் மம்முட்டி நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இப்போது ஏஜென்ட் படத்தில் நடிக்கிறார். இதற்கு முன் அவர் இரு தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.