’வாழ்த்துகள் சூர்யா, அன்புடன் தேவா’ ரஜினிக்கு மம்மூட்டியின் ஸ்பெஷல் வாழ்த்து!

’வாழ்த்துகள் சூர்யா, அன்புடன் தேவா’ ரஜினிக்கு மம்மூட்டியின் ஸ்பெஷல் வாழ்த்து!

’தளபதி’ தேவா - சூர்யா

சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு நடிகர் மம்மூட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு நடிகர் மம்மூட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

  இந்திய சினிமாவில் ஒரு கலைஞருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கெளரவமாக கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருது இந்த வருடம் நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காலை தனது ட்விட்டரில் தெரிவித்தார். இந்த விருது தங்க தாமரை (கோல்டன் லோட்டஸ்) பதக்கம், ஒரு சால்வை மற்றும், 10,00,000 ரொக்கப் பரிசை உள்ளடக்கியது. கடந்த 2018-ம் வருடம் இந்த தாதா சாஹேப் பால்கே விருது நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.

  Rajinikanth: தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் ரஜினிக்கு பிரபலங்கள் வாழ்த்து!

  தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் பாலச்சந்தர் ஆகியோருக்குப் பிறகு மூன்றாவதாக இவ்விருதைப் பெற்று பெருமையடைந்திருக்கிறார் ரஜினி. இதையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் நடிகர் மம்மூட்டியும் ரஜினிக்கு தனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், “தாதாசாகேப் பால்கே விருது பெரும் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்.
  அன்புடன் தேவா” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

  Rajinikanth: ‘தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது’ ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

  இயக்குநர் மணிரத்னத்தின் ‘தளபதி’ படத்தில் சூர்யா என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினியும், தேவா என்ற கதாப்பாத்திரத்தில் மம்மூட்டியும் நண்பர்களாக நடித்திருந்தனர். நட்புக்கு இலக்கணமாக விளங்கும் இந்த கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: