உதயநிதி ஸ்டாலின் இனி அரசியலில் கவனம் செலுத்த உள்ளதால் 'மாமன்னன்'தான் கடைசி திரைப்படமாக இருக்கும் என்றும் கமல் படத்தை கைவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக இருந்து, நடிகரானார். தற்போது கலகத் தலைவன், மாமன்னன், கண்ணை நம்பாதே ஆகியப் படங்களில் நடித்துள்ளார். அதோடு திமுக-வின் இளைஞரணி செயலாளரான உதய், 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கி மாபெரும் வெற்றி பெற்றார்.
சினிமா, அரசியல் என பம்பரம் போல சுழன்றுக் கொண்டிருக்கும் உதயநிதியின் நடிப்பில் நவம்பர் 18-ம் தேதி கலகத் தலைவன் திரைப்படம் வெளியானது.
இதனை தொடர்ந்து ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை ரெட்ஜெண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களைப் போல இந்த மாமன்னன் திரைப்படமும் ஒரு முக்கிய விஷயத்தை பேச உள்ளது என கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 14-ம் தேதி நிறைவடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்ததாக மாமன்னன் படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Also read... ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட கமலின் 7 படங்கள்!
இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9:30 மணிக்கு உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற விழா தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
Udhaynidhi Stalin is not doing the announced film with @ikamalhaasan's RKFI due to his political commitments. #Maamannan will be his final film!
— Siddarth Srinivas (@sidhuwrites) December 14, 2022
இதனை தொடர்ந்து முழு நேரமும் அரசியலில் உதயநிதி களமிறங்க உள்ளதால் மாமன்னன் தான் கடைசி படமாக இருக்கும் என்றும் கமல் படத்தை அவர் கைவிட்டதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal Haasan, Udhayanidhi Stalin