சிவகார்த்திகேயனுக்கு தர லோக்கலில் சாங் கொடுத்த யுவன் - ‘ஹீரோ’ பட பாடல் வீடியோ!

news18
Updated: November 6, 2019, 5:43 PM IST
சிவகார்த்திகேயனுக்கு தர லோக்கலில் சாங் கொடுத்த யுவன் - ‘ஹீரோ’ பட பாடல் வீடியோ!
ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன்
news18
Updated: November 6, 2019, 5:43 PM IST
‘ஹீரோ’ படத்தின் முதல் பாடலை படக்குழு அறிவித்துள்ளது.

இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ஹீரோ. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜுன், இவானா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் செப்டம்பர் மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.


கடந்த மாதம் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு தற்போது படத்தில் இடம் பெற்றுள்ள மால்டோ கித்தாப்புலே என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை ரோகேஷ் எழுதியுள்ளார். ஷ்யாம் விஸ்வநாதன் பாடியுள்ளார்.

பாடலில் சென்னை வட்டார மொழியில் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாடல் வெளியான சில நிமிடங்களில் அதை இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்கச் செய்துள்ளனர் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள்.

First published: November 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...