Mallika Sherawat: மல்லிகா ஷெராவத்தின் ’பாம்பாட்டம்' ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!

Mallika Sherawat: மல்லிகா ஷெராவத்தின் ’பாம்பாட்டம்' ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!

மல்லிகா ஷெராவத்

தமிழில் குரு, ஒஸ்தி படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியவர், தசாவதாரத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார்.

  • Share this:
    மல்லிகா ஷெராவத் நடித்துள்ள தமிழ்ப் படமான பாம்பாட்டத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

    ஏர் ஹோஸ்டஸாக வாழ்க்கையை தொடங்கிய மல்லிகா ஷெராவத் மாடலிங், தொலைக்காட்சி நிகழ்ச்சி, சினிமா என்று பல துறைகளில் பணிபுரிந்துள்ளார். இவற்றில் மாடலிங்கும், சினிமாவும் அவரை பிரபலப்படுத்தியது.

    இந்தியில் நடிப்பு வாழ்க்கையை தொடங்கியவர் தி மித், டைம் ரைடர்ஸ் ஆகிய இரு சீனப் படங்களில் நடித்தார். ஹிஸ், பாலிடிக்ஸ் ஆஃப் லவ் ஆகிய ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் குரு, ஒஸ்தி படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியவர், தசாவதாரத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார்.

    Mallika Sherawat Tamil Movie Pambattam first look released
    மல்லிகா ஷெராவத்


    மல்லிகா ஷெராவத் நடிப்பில் தமிழில் தயாராகி வந்த படம், பாம்பாட்டம். வி.சி.வடிவுடையான் இயக்கிய இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுவொரு சரித்திர படம். ஹாரர் விஷயங்களும் படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

    அம்பரிஷ் பாம்பாட்டத்துக்கு இசையமைக்க, ஜீவன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் சார்பாக வி.பழனிவேல் படத்தை தயாரித்துள்ளார். விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: