டீசர் கூட வெளியாகல... ‘மாஸ்டர்’ பிசினஸ் குறித்து பிரபல நிறுவனம் பெருமிதம்

டீசர் கூட வெளியாகல... ‘மாஸ்டர்’ பிசினஸ் குறித்து பிரபல நிறுவனம் பெருமிதம்
மாஸ்டர்
  • Share this:
மாஸ்டர் படத்தின் வியாபாரம் குறித்து மாலீக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. விஜய்யின் 64-வது படமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கும் இந்தப் படத்தில் சாந்தனு, ஆன்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன.

வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படத்தைத் திரைக்குக் கொண்டு வர படக்குழு முடிவு செய்திருக்கும் நிலையில் கடந்த 12-ம் தேதியே படத்தின் விநியோகம் முடிவடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்தின் இரண்டு போஸ்டர்கள் மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில் அனைத்து ஏரியாக்களிலும் பிசினஸ் களைகட்டியிருப்பது விஜய்க்கு மட்டுமே சாத்தியம் என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர்.


இந்நிலையில் மாஸ்டர் படத்தின் வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய மாலீக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம், “‘மாஸ்டர்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற நாங்கள் இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் விற்பனை செய்து விட்டோம். படத்தின் டீசர், ட்ரெய்லர் கூட இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட வெளியாக வில்லை. ஆனால் இந்த படத்தின் ஒட்டு மொத்த வியாபாரமும் முடிந்துவிட்டது” என்று பெருமிதம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க: Exclusive | பாண்டிராஜ் தான் ‘தளபதி 65’ இயக்குநரா? - விஜய் தரப்பு விளக்கம்!

புகைப்படங்களைப் பார்க்க க்ளிக் செய்க : ‘ராங்கி’ த்ரிஷாவின் ரசிக்க வைக்கும் போட்டோஸ்!


First published: January 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading