இந்திய மருத்துவத்துறையை அம்பலப்படுத்தும் பாண்டம் ஹாஸ்பிடல்!

இயக்குநர் மகேஷ் நாராயணன் மற்றும் தயாரிப்பாளர் ப்ரீத்தி சஹானி

படத்தின் திரைக்கதையை மகேஷ் நாராயணனும், ஆகாஷ் மொகிமனும் இணைந்து எழுதுகின்றனர். தல்வார், ராசி, பதாய் கோ போன்ற முக்கியமான படங்களை தயாரித்த ப்ரீத்தி சஹானி இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய மருத்துவத்துறையில் நடக்கும் சட்டமீறல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் பாண்டம் ஹாஸ்பிடல் என்ற படம் இந்தியில் தயாராகிறது. மலையாள மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இந்தப் படத்தை இயக்குகிறார். 

மகேஷ் நாராயணன் அடிப்படையில் எடிட்டர், ஒளிப்பதிவாளர். இவர் இயக்கத்தில் முதலில் வெளிவந்த படம், டேக் ஆஃப். ஈராக் போரின் போது, அங்கு மாட்டிக் கொண்ட இந்திய செவிலியர்களை குறித்த படம். சர்வதேச தரத்துக்கு இணையாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பகத் பாசில், குஞ்சாகா போபன், பார்வதி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அடுத்து சி யூ சூன் படத்தை இயக்கினார். இதிலும் பகத் நாயகன். அதையடுத்து சமீபத்தில் மாலிக் வெளிவந்து பரவலான கவனிப்பை பெற்றது

இதையடுத்து இந்தியில் பாண்டம் ஹாஸ்பிடல் என்ற படத்தை இயக்குகிறார். எழுத்தாளரும், இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்டுமான ஜோசி ஜோசப்  இந்திய சுகாதாரத்துறையை குறித்து புலன்விசாரணை செய்து எழுதியதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாராகிறது.

Also read... Money Heist Season 5 Volume 1 எப்படி இருக்கிறது?

படத்தின் திரைக்கதையை மகேஷ் நாராயணனும், ஆகாஷ் மொகிமனும் இணைந்து எழுதுகின்றனர். தல்வார், ராசி, பதாய் கோ போன்ற முக்கியமான படங்களை தயாரித்த ப்ரீத்தி சஹானி இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published: