இந்தி நடிகைகளின் இன்பச்சுற்றுலா - தடைபோட்ட மாலத்தீவு

பாலிவுட் பிரபலங்கள்

இந்திப் படவுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள், இந்த கொரோனா பேரிடர் காலத்தில் மாலத்தீவுக்கு விடுமுறையை கழிக்கச் சென்றனர். அவர்களுக்கு 27-ம் தேதி, நாளை முதல் அனுமதி மறுத்திருக்கிறது மாலத்தீவு அரசு.

  • Share this:
கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி இந்தியா சின்னாபின்னாமாகிக் கொண்டிருக்கிறது. மருந்து இல்லை, தடுப்பூசி இல்லை, சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை என்று தினம் ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள்.

சோனு சூட் போன்ற நல்உள்ளம் கொண்ட நடிகர்கள் மக்களுக்கு தொடர்ச்சியாக உதவி வருகிறார்கள். ஜான்வி கபூர் போன்ற சில நடிகைகள் மாலத்தீவு சென்ற போது எடுத்த கவர்ச்சிப் புகைப்படங்களை இந்த நேரத்தில் சமூகவலைதளத்தில் பதிவேற்றினர்.

தொடர்ச்சியாக வந்த இந்த புகைப்படங்களால், மொத்த இந்திப்பட உலகும் மாலத்தீவு நோக்கி படையெடுக்கிறதோ என்ற தோற்றம் ஏற்பட்டது. ஸ்ருதிஹாசன் வெளிப்படையாகவே இதனை கண்டித்தார். மக்கள் சாகும்போது, உங்களின் இன்பச்சுற்றுலா படங்களை இப்படி சுற்றுக்கு விடலாமா என கேள்வி எழுப்பினார். ஆனால், யார் இதனை கேட்கிறார்கள். இந்தி திரையுலகின் இளம் காதல் ஜோடி அலியா பட்டும், ரன்பீர் கபூரும் சில தினங்கள் முன்பு மாலத்தீவு கிளம்பினர். அவர்களைத் தொடர்ந்து டைகர் ஷெராஃபும், திஷா பதானியும் சென்றனர்.கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், இந்திய பயணிகளை பல நாடுகள் தடை செய்துள்ளன. மாலத்தீவும், 27-ம் தேதி நாளை முதல் இந்தியாவிலிருந்து மாலத்தீவு வருவதற்கு தடை விதித்துள்ளது. இதன் மூலம் பாலிவுட் நட்சத்திரங்களின் மாலத்தீவு சுற்றுலா ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
Published by:Sheik Hanifah
First published: