அஜித்தின் துணிவு ட்ரைலர் வெளியீட்டை முன்னிட்டு மலேசிய அஜித் ரசிகர்கள் கார் ஊர்வலம் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து துணிவு படத்தின் 3 பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் கடந்த 31-ம் தேதி இதன் ட்ரைலர் வெளியானது. வங்கி கொள்ளையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் துணிவு ட்ரைலர் அஜித் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், விஜய்யின் பீஸ்ட் இரண்டாம் பாகம் போல் இருப்பதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
We Proud #ThunivuCharityConvoy The Biggest Ever For An Actor And Movie In Malaysia 🔥@Thalafansml @malikstreams @LycaProductions @BayViewProjOffl @ZeeStudios_ @BoneyKapoor #ThunivuByMSC #malikstreams #Thunivu #OperationThunivu #Ajithkumar pic.twitter.com/cd4s32sG2B
— MALAYSIA AJITH FAN CLUB (@Thalafansml) January 1, 2023
லவ் டுடே இந்தி ரீமேக்... ஹீரோ யார் தெரியுமா?
இதற்கிடையே துணிவு ட்ரைலர் வெளியீட்டை கொண்டாடும் விதமாக காரில் ஊர்வலம் சென்றுள்ளார்கள் மலேசிய அஜித் ரசிகர்கள். அந்த கார்களில் பட போஸ்டர்களும் இடம்பெற்றிருந்தன. அதோடு ட்ரக்குகளில் அஜித்தின் துணிவு போஸ்டர் இடம்பெறும்படியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith