தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு 1 கோடி அளித்த மலையாள தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன்!

கோகுலம் கோபாலன்

மலையாள திரைப்பட தயாரிப்பாளர் தனியாக ஒரு கோடி ரூபாய் அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  பிரபல மலையாளப்பட தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார்.

  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து 10 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்த நிலையில், மலையாள திரைப்பட தயாரிப்பாளர் தனியாக ஒரு கோடி ரூபாய் அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  பேரிடர் காலங்களில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தாராளமாக உதவி செய்வது வாடிக்கை. நுட்பமாகப் பார்த்தால் ரசிகர் மன்றங்கள் வைத்திருக்கும் நடிகர்களே இந்த உதவியில் முன்னணியில் இருப்பார்கள். நடிகர்கள், இயக்குனர்கள் அபூர்வமாக உதவி செய்வதுண்டு, அதேபோல் தான் தயாரிப்பாளர்கள். நெருக்கடி காலங்களில் ஏன் உதவி செய்யவில்லை என்று மக்கள் முன்னணி நடிகர்களைப் பார்த்தே கேள்வி எழுப்புவார்கள். தயாரிப்பாளர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கோகுலம் கோபாலன் தனது ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். பழசிராஜா, காயங்குளம் கொச்சுண்ணி போன்ற பிரமாண்ட தயாரிப்புகள் இவருடையதே. மலையாளத்தில் சித்தார்த் அறிமுகமான கம்மார சம்பவம், ஜீத்து ஜோசப் இயக்கிய மிஸ்டர் அண்ட் மிசஸ் ரவுடி, ரோஷன் ஆண்ட்ரூவின் பிரதி பூவன்கோழி உள்பட ஏராளமான திரைப்படங்களை தயாரித்துள்ளார். தற்போது வினயன் இயக்கத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு, டொவினோ தாமஸ் நடிக்கும் பள்ளிச்சட்டம்பி ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார். தமிழில் தனுசுராசி நேயர்களே, கமலின் தூங்காவனம் (இணைதயாரிப்பு) படங்களையும் தயாரித்துள்ளார்.

  இவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி அளித்துள்ளார். மலையாளப்பட இயக்குனர் ஒருவர் தமிழ்நாட்டிற்கு ஒரு கோடி ரூபாய் அளித்தது ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: