முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மஞ்சள் காமாலையால் உயிரிழந்த இளம் இயக்குநர்… சில நாட்களில் படம் ரிலீஸ்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

மஞ்சள் காமாலையால் உயிரிழந்த இளம் இயக்குநர்… சில நாட்களில் படம் ரிலீஸ்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

இயக்குனர் மனு ஜேம்ஸ்

இயக்குனர் மனு ஜேம்ஸ்

மஞ்சள் காமாலை பாதிப்பால் கேரள மாநிலம் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தான் இயக்கிய முதல் திரைப்படம் விரைவில் வெளியாகவிருந்த நிலையில் 31 வயதாகும் இளம் இயக்குனர் மனு ஜேம்ஸ் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2004-ஆம் ஆண்டு மலையாளத்தில் I am Curious ஐ அம் க்யூரியஸ் என்ற திரைப்படம் வெளியானது. இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மனு ஜேம்ஸ் கவனம் பெற்றிருந்தார். திரைத்துறையுடன் தொடர்பில் இருந்த மனு ஜேம்ஸ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

திரைத்துறையில் முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. இந்நிலையில் அஹானா கிருஷ்ணா, சன்னி வேய்ன், அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், லீனா மற்றும் லால் உள்ளிட்டோர் நடிப்பில் மனு ஜேம்ஸ் இயக்கத்தில் ‘நான்சி ராணி’ என்ற திரைப்படம் உருவாகி வந்தது. இதன் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்சன் பணிக்ள தற்போது நடந்து வருகின்றன.

இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பாக படத்தின் இயக்குனர் மனு ஜேம்ஸ் மஞ்சள் காமாலை பாதிப்பால் கேரள மாநிலம் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று உயிரிழந்தார். அவரது நான்சி ராணி திரைப்படம் இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள நிலையில், இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. உயிரிழந்த மனு ஜேம்ஸிற்கு நைனா என்ற மனைவியும், ஜோசப், சிசிலி  என்ற மகன்களும் உள்ளனர்.

இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான குருவிலாங்காட்டில் இன்று நடந்தது. மனு ஜேம்ஸ் மரணம் குறித்து நான்சி ராணி படத்தின் தயாரிப்பாளர் தனது பேஸ்புக் பதிவில், ‘இயக்குனராக மனு ஜேம்ஸ் நான்சி ராணி படத்தின் மூலம் தன் கனவை நிறைவேற்றியுள்ளார். இந்த படம் மக்கள் இதயங்களை உடைக்கும். நான்சி ராணி படம் மலையாள திரையுலகில் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக மாறும். அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத வாழ்க்கையின் முன்பு எல்லோரும் சிறியவர்களே!’ என்று கூறியுள்ளார்.


First published:

Tags: Mollywood