'அய்யப்பனும் கோஷியும்’ இயக்குநர் உடல்நலக்குறைவால் மரணம்

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் கே.ஆர் சச்சிதானந்தம் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்

'அய்யப்பனும் கோஷியும்’ இயக்குநர் உடல்நலக்குறைவால் மரணம்
அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் சச்சி உடன் நடிகர் பிருத்விராஜ்
  • News18
  • Last Updated: June 18, 2020, 10:51 PM IST
  • Share this:
கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி. 2015-ம் ஆண்டு பிருத்விராஜ், பிஜூ மேனன் உள்ளிட்டோர் நடித்த அனார்களி படத்தை இயக்கிய சச்சி, சமீபத்தில் அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை இயக்கினார்.

பிருத்விராஜ், பிஜூ மேனன் நடித்திருந்த இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





படிக்கஊர் பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணை வாபஸ்

படிக்கஇந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு



கே.ஆர்.சச்சிதானந்தத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 48 வயதாகும் அவருக்கு திடீரென இதயத்துடிப்பில் பிரச்னை ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சச்சிதானந்தம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading