Home » News » Entertainment » CINEMA MALAYALAM FILM JALLIKATTU IS INDIA S ENTRY FOR OSCAR 2021 MSB

ஆஸ்கரில் போட்டியிட இந்தியா சார்பாக தேர்வான ‘ஜல்லிக்கட்டு’

‘ஜல்லிக்கட்டு’ மலையாள படத்தை 2021-ம் ஆண்டுக்கான ஆஸ்கருக்கு போட்டியிட இந்தியாவின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கரில் போட்டியிட இந்தியா சார்பாக தேர்வான ‘ஜல்லிக்கட்டு’
ஜல்லிக்கட்டு பட ஸ்டில்
  • Share this:
லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’. மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. அச்சிறுகதையை ஹரீஷ்.எஸ் எழுதியிருந்தார்.

2019-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் வெளியான ‘கல்லி பாய்’ என்ற இந்திப் படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இறுதிப்பட்டியல் வரை இந்தப் படம் செல்லவில்லை

இந்த முறை குஞ்ஜன் சக்ஸேனா, ஷகுந்தலா தேவி, தி டிஸைபில், ஷிகாரா, 'குலாபோ சிதாபோ, சப்பாக், செக் போஸ்ட், சிண்டூ கா பர்த்டே' உள்ளிட்ட 27 படங்கள் போட்டியிட்டன. இதில் இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Cyclone Nivar | புயல் காற்றால் சாய்ந்த மரம்.. பிரபல இயக்குநரின் கார் சேதம்

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, 2021-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதை இதுவரை எந்தவொரு இந்திய திரைப்படமும் பெறாத நிலையில் ‘ஜல்லிக்கட்டு’ அதை மாற்றியமைக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
First published: November 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading