• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Remya Suresh: மார்பிங் வீடியோவால் உடைந்துப் போன நடிகை - சைபர் கிரைமில் புகார்

Remya Suresh: மார்பிங் வீடியோவால் உடைந்துப் போன நடிகை - சைபர் கிரைமில் புகார்

ரெம்யா சுரேஷ்

ரெம்யா சுரேஷ்

தனது குடும்பத்தின் ஆதரவு காரணமாக, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை தன்னால் சமாளிக்க முடியும் என்று ரெம்யா கூறினார்.

  • Share this:
    மலையாள நடிகை ரெம்யா சுரேஷ் பேஸ்புக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, அதில் மார்பிங் செய்யப்பட்ட ஒரு வீடியோவைப் பற்றி பேசினார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் உள்ள பெண் ரெம்யா சுரேஷை ஒத்திருப்பதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர். அவர் பேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவில், எமோஷனலான ரெம்யா, அலப்புழா போலீஸ் மற்றும் சைபர் க்ரைமில் புகார் அளித்திருப்பதாகக் கூறினார்.

    அந்த வீடியோவில் உள்ள பெண் தன்னை மிகவும் ஒத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறினார் ரெம்யா. “ஆச்சரியப்படும் விதமாக, அவருடைய முக அம்சங்கள் என்னுடையதுடன் பொருந்துகின்றன. என்னை நன்கு அறிந்தவர்கள் உற்று நோக்கினால், வித்தியாசத்தை சொல்ல முடியும். ஆனால், மற்றவர்கள் அந்த வித்தியாசத்தைக் காண முடியாது என்று நான் பயப்படுகிறேன்” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆலப்புழாவில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சைபர் க்ரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ரெம்யா சுரேஷ் குறிப்பிட்டார். “வீடியோவில் உள்ளவர் நான் அல்ல என்பது எனக்குத் தெரியும். என் கணவரும் என்னுடன் நிற்கிறார். இது எனக்கு தைரியத்தைத் தருகிறது. காவல்துறை அதிகாரிகளும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். அவர்கள் எனக்கு உதவ முடிந்த அனைத்தையும் செய்வதாக உறுதியளித்தனர். மேலும் வீடியோவைப் பகிர்ந்த நபரின் விவரங்களையும் அவர்கள் சேகரித்தனர். நான் வீடு திரும்பி நம்பிக்கையுடன், தைரியமாக உணர்ந்தேன். ஆனால், எனது பேஸ்புக் பக்கத்தில் நிறைய செய்திகள் வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்த பிறகு எனது நண்பர்கள் என்னை அழைக்கும் போது, நான் என்ன சொல்வேன் என்று பயப்படுகிறேன். ஏனெனில் முதல் பார்வையில், வீடியோவில் உள்ள பெண் என்னைப் போலவே இருக்கிறார்” என்றார் ரெம்யா.

    தனது குடும்பத்தின் ஆதரவு காரணமாக, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை தன்னால் சமாளிக்க முடியும் என்று ரெம்யா கூறினார். இத்தகைய விஷயங்களால் பல அப்பாவி மக்களின் வாழ்க்கை எவ்வாறு பாழடைந்துள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். "எந்தவிதமான சமரசங்களும் செய்யாமல், நான் இன்று இருக்கும் இடத்தை அடைந்திருக்கிறேன். எனவே தயவுசெய்து என்னைப் பற்றி அப்படி நினைக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.

    நயன்தாரா, குஞ்சாகோபோபன் நடித்த நிழல் படத்தில் ரெம்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: