முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கோயில் புனிதத்தை களங்கப்படுத்தியதாக பிரபல நடிகை கைது

கோயில் புனிதத்தை களங்கப்படுத்தியதாக பிரபல நடிகை கைது

நிமிஷா பிஜோ

நிமிஷா பிஜோ

அப்போது அவர் காலில் செருப்பும் அணிந்து இருந்தார் நிமிஷா.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோயில் படகில் ஏறி புகைப்படம் எடுத்த நடிகை தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள பல கோயில்களில் சொந்தமாக நீண்ட பாம்பு வடிவிலான படகுகள் உள்ளன. இந்த படகுகளை கேரள மக்கள் புனிதமாக கருதுகின்றனர்.

அந்த வகையில் அரன்முலா கோயிலுக்கு சொந்தமான பாம்பு வடிவிலான படகு உள்ளது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகை நிமிஷா பிஜோ, பம்பை ஆற்றில் சாமி ஊர்வலத்தின்போது பயன்படுத்தப்படும் அந்த படகில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அவர் காலில் செருப்பும் அணிந்து இருந்தார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சமூக வலைதளங்களில் நிமிஷாவை பலரும் கண்டித்தனர். இதைத் தொடர்ந்து, கேரள தேவஸ்தானம் சார்பில் நிமிஷா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் நிமிஷாவை கேரள போலீசார் கைது செய்தனர். அப்போது “இந்த படகு புனிதமானது என்று எனக்கு தெரியாது. கேள்விப்பட்டதும் இல்லை. தெரியாமல் இந்த தவறை செய்து விட்டேன்” என்றார் நிமிஷா. பின்னர் அவர் பெயிலில் விடுவிக்கப்பட்டார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: